Translate

இந்திய விடுதலை போராட்ட வீரர் வைத்தியநாதய்யர் ஐயர் - India Freedom Fighter Vaidyanatha Iyer

இந்திய விடுதலை போராட்ட வீரர்  வைத்தியநாதய்யர் ஐயர் - India Freedom Fighter Vaidyanatha Iyer

indian freedom fighter - vaidyanatha iyer -toughtamizhan


மதுரையை சேர்ந்த வைத்தியநாதய்யர் 1890-1955 ஒரு இந்திய விடுதலைக்காகப் போராடியவர். 

வைத்தியநாதய்யர் தாழ்த்தப்பட்ட மக்களை ஆலயத்துக்குள் அழைத்துச் செல்வதில் தீவிரமாக இருந்தார்.

வைத்தியநாதய்யர் 1934ல் மதுரையிலிருந்து நாகர்கோவிலுக்கு தாழ்த்தப்பட்ட மக்களை அவருடன் அழைத்துச் சென்ற  நாகநாதசுவாமி கோயிலைத் தரிசனம் செய்யவைத்தார். இதுபோலப் பல கோயில்களுக்கும் மக்களை இவர் அழைத்துச் சென்றார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ளே போகத் தடை என்ற  நிலை இருந்து வந்தது பின்னர் 1939 ஆம் ஆண்டில் ஆலய பிரவேசப் போராட்டத்தைப் பெற்றுக்கொண்ட பின்னரே அனைத்து சமுகத்தினரும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். 1937ல் மகாத்மா காந்தி தமிழகம் வந்தபோது, இந்து அரிசனங்களையும், தாழ்த்தப்பட்ட மக்கள்  கோவிலுக்குள் அனுமதி மறுக்கப் பட்டுள்ளது என்பதை அறிந்து மகாத்மா, அதைக் கண்டித்து தானும் மீனாட்சியம்மன் ஆலயத்திற்கு உள்ளே செல்லமாட்டேன் என்று மறுத்து விட்டார். மகாத்மா காந்தியின் இவ்விதமான  மறுப்பு காங்கிரசில் இருப்பவர்களிடமும், ஆச்சாரக் காப்பாளர்களிடமும் சலசலப்பை உருவாக்கியது. 1930 ஆண்டுக்கு அடுத்திலிருந்து  தாழ்த்தப்பட்டோர் ஆலயங்களுக்குள் கட்டாயம் செல்ல வேண்டும் என்பதை குறித்து வலியுறுத்தும் எண்ணம் மகாத்மா காந்தியிடமிருந்து வந்தது

வைத்தியநாதய்யர் 8 ஜூலை 1939 அன்று முத்துராமலிங்கத் தேவர் பாதுகாப்புடன் தாழ்த்தப்பட்ட மக்களை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள்  அழைத்துச் சென்று அனைவரும் சமம் என்று நிகழ்த்திக்காட்டினார்.

வைத்தியநாதய்யர் பற்றி : 

தஞ்சாவூர் மாவட்டத்தில் விஷ்ணாம்பேட்டையில் அருணாசலம் அய்யர் (தந்தை) -லட்சுமி அம்மாள் (தாய்) மகனாகப் பிறந்த இவர், மதுரையில் உள்ள  சேதுபதி உயர்நிலைப் பள்ளியிலும் பிறகு மதுரைக் கல்லூரி மற்றும் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தார் ஆவர். பின்னர் வைத்தியநாதய்யர் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 

வழக்கறிஞரான  இருந்த பொது, அவரது பணியில் செல்வம் ஈட்ட வாய்ப்பு கிடைத்தபோதும் அதில் நாட்டம் இல்லாமல் தனது நாட்டின் சுதந்திரப் போராட்டத்துக்க்காகத் தன்னையும் தனது குடும்பத்தையும் ஈடுபடுத்திக் கொண்டாவர். வேதாரண்யத்தில் நடந்த உப்புச்சத்தியாக் கிரகத்தில்  ராஜாஜி கைதானார், அதன் பிறகு அங்கு நடந்த கூட்டத்தில் வைத்தியநாதய்யர் ஆங்கிலேயர்கள் விதித்த தடையை மீறிப் பேசினார், அதற்காக அய்யரை ஆங்கிலேயர் வைத்தியநாதய்யரை  தாக்கினர். அதுமட்டுமில்லாமல்  ஆங்கிலேயர்கள் வைத்தியநாதையரை  அரைகிலோ மீட்டர் தூரம் தரையில் இழுத்துச் சென்று சித்திரவதை செய்து உடல் முழுதும் காயத்துடன் சிறையிலும் அடைத்தனர். வைத்தியநாதய்யர் கள்ளுக்கடையை எதிர்த்தும், சட்டமறுப்பு இயக்கம் போன்ற விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டதால் ஆங்கிலேயரால் சித்திரவதைக்குட்பட்டு  பலதடவை சிறைக்கு  அடைக்கப்படடார்.நீதிமன்ற அபராதத்துக்காக ஆங்கிலேய அரசு அவரது கார் மற்றும் சட்டப்புத்தகங்களை ஜப்தி செய்துள்ளது. வைத்தியநாத ஐயர் விடுதலைப் போராட்டத்தின்  செலவிற்காகத் தனது மனைவியின் நகைகளையும், வீட்டுப் பொருள்களையும் அடகுவைத்தும், விற்றும் வரும்  பணத்தை போராட்டத்திற்காக அளித்தவர்.

தனி நபர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் அவரது  மனைவி அகிலாண்டம்மாளை வைத்தியநாதய்யரை பங்கேற்க செய்தார். இதனால் அகிலாண்டம்மாள் பல மாதம் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு சிறை தண்டனையை அனுபவித்து வந்தார். தனது இளையமகன் சங்கரனையும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவைத்தார். சங்கரனும் பலமாதம் சிறையில் இருந்தார். வைத்தியநாதய்யர் அலிப்புரம் சிறையில் இருந்தபோது அவரது மூத்த மகன் காலமாக்கினார். இதனால் அவரால் மகன் இறுதிச் சடங்கில் கூடப் பங்கேற்க அவரால் முடியவில்லை. இவரது மகளின் கல்யாணமும் சிறை தண்டனை பரோல் காலத்திலேயே நடந்து முடிந்தது விட்ட காரணத்தால் திருமணத்தைப் பார்க்க முடியவில்லை.

வழக்கறிஞர் வைத்தியநாதய்யர் தலைமையில், அப்போதைய சென்னை ராஜதானியின் பிரதம மந்திரியான ராஜாஜி அவர்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களைத் தொடர்புகொண்டு சானார் மற்றும் ஆதி திராவிட மக்களின் ஆலய பிரவேசதுக்கு தக்க பாதுகாப்பு கொடுக்குமாறு வேண்டியதை மகிழ்வுடன் ஏற்றுகொண்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மதுரை முழுவதும் துண்டுப் பிரசுரங்கள் விடுத்து மேல் ஜாதி மக்களை எக்காரணம் கொண்டும் சாணார் மற்றும் ஆதி திராவிட மக்களின் ஆலய பிரவேசிப்பதற்கு பிரச்சனை கொடுக்காது ஒதுங்கி இருக்குமாறு எச்சரிக்கை விடுத்தார். அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் இருவரின் மத்தியில் இத்தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

8 ஜூலை  1939ல் காலை 10 மணிக்குப் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பாதுகாப்புடன் எதற்கும் அவர் சானார் மற்றும் ஆதி திராவிட மக்களுடன் தனது ஆதரவாளர் படை சூழ ஆலயப் பிரவேசம் செய்தார். ஆனால் இதற்காக அவர் பிராமணர்களால் சாதி விலக்கம் செய்யப்பட்டார். ஆனாலும் மக்களின் உரிமைக்காக அவர் தீவிரமாகப் போராடினார்.

ராஜாஜி ஆலயப் பிரவேசத்தை சட்டப் பூர்வமாக அங்கீகரித்துச் சட்டம் பிறப்பித்தார். குறிப்பிட்ட சமூகத்தினரை கோவிலுக்குள் இவ்வளவு காலம் வரவிடாமல் தடுத்துக் கொண்டிருந்து இருந்தவர்கள் இந்த நுழைவைத் தாங்க முடியாமல், மீனாட்சி அம்மன் கோவிலை விட்டு வெளியேறி விட்டாள் என்று தகவலைப் பரப்பி, மதுரையின்  தமிழ்ச்சங்கம் சாலையில் உள்ள நடேசய்யர் பங்களாவில் மீனாட்சி அம்மன் கோவில் அமைத்து அங்குப் பூஜை  நடத்தியுள்ளனர். 1945 ஆண்டுவரை இந்தக் கோவிலில் பூசை நீடித்து, பிறகு சிதைந்து போனது. பின்னர் பழையபடி மீனாட்சியம்மன் கோவிலுக்கே அர்ச்சகர்கள் பூஜையைத் தொடங்க அனைவரும் திரும்பினர்.

நாட்டுக்கும் மற்றும்  தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அவரது  வாழ்வைவே  அர்ப்பணித்த கொண்ட வைத்தியநாதய்யர் மேலூரின் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துகொண்டு  மக்கள்க்கு  நற்ப்பணிகளைச் தொடர்ந்து  செய்துள்ளார். தியாகச் சீலரான வைத்தியநாதய்யர்  23ம் தேதி பிப்ரவரி 1955 ஆம் ஆண்டு  உயிர் துறந்தார்.

இந்திய அரசு வைத்தியநாதய்யரின் நினைவாக அவருக்கு மரியாதை செய்யும் விதத்தில் அவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.

Next Post Previous Post
No Comment