How to take photos in camera / கேமராவில் போட்டோ எடுப்பது எப்படி
How to take photos in camera / கேமராவில் போட்டோ எடுப்பது எப்படி
கேமரா :
கேமராவை பொறுத்தவரை எவ்வளவோ மாடல் இருக்கின்றன, அவைகள் கேனான் கேமரா, சோனி கேமரா, நிகான் கேமரா என்று பலவகை இருக்கின்றன. இவை அனைத்துமே பார்க்க வேறுபட்டதாக இருக்கும், அதன் தனிதத்துவமான மெனுக்கள் ஒவ்வொரு கேமெரா மடல்களிலும் வேறுபாடும். அனால் அனைத்துமே புகைப்படம் எடுப்பது என்பது ஒரே அடிப்படையைக் கொண்டது தான்.
இங்கு நிறைய பேர் புகைப்படம் எடுக்கத் தனி தனியாகக் கட்டணம்கட்டி கற்றுக்கொள்கிறார்கள், என்னைப் பொறுத்தவரை அது அனாவசியமான செலவு தான். போட்டோகிராஃபி என்பது கட்டணம் கொடுத்துக் கற்றுக்கொள்ளும் விஷயம் கிடையாது. போட்டோகிராஃபி என்பது மிகவும் எளிமையானது அதுமட்டும் இல்லாமல் போட்டோகிராஃபி மேல் இருக்கும் ஒரு தாக்கம் நம்மை நாமே இதில் செதுக்கிக்கொள்ளும் வழிவகை செய்யும்.
கேமரா என்றால் என்ன ?
கேமரா என்பது நமது கண் போன்றது, நாம் வெளியே செல்லும் பொது எவ்வளவோ அழகான விஷயத்தைப் பார்க்கிறோம், அப்படி நமக்கு அழகாகத் தோன்றும் காட்ச்சிகளை, நாம் பார்த்து ரசிப்பதை போன்று தான் போட்டோகிராஃபியும், நமது கண்கள் அழகான காட்ச்சிகளை எப்படி பார்க்கிறதோ அதே போன்று தான் கேமராவில் அதைப் புகைப்படமாக எடுத்துப் பதிய வைப்பதும்
கேமரா செட்டிங்ஸ் :
முன்பே சொன்னது போலக் கேமராக்கள் பல விதமாக இருந்தாலும், புகைப்படம் எடுப்பது என்பது ஒரே அடிப்படையில்தான், புகைப்படம் எடுக்கத் தேவையான அடிப்படை இதோ எளிதாக
Aperture - அப்பச்சர்
ISO - ஐ எஸ் ஓ
Shutter - ஷெட்டர்
இவை மூன்றுமே கேராவில் புகைப்படம் எடுக்க மிக முக்கியமானவை. இவை மூன்றுமே லைட் ஐ கண்ட்ரோல் செய்யக்கூடியவை. இவைகளை நாம் சரியாக வைக்காவிட்டால் புகைப்படம் லைட் இல்லாமல் கருப்பாக இருக்கும், அல்லது லைட் அதிகாமாக இருந்தால் புகைப்படம் வெள்ளையாக இருக்கும், இப்படி இருந்தால் நாம் எடுக்கும் புகைப்படம் சரியாக இருக்காது.
Aperture / அப்பச்சர் - என்றால் என்ன ?
அப்பச்சர் என்பது முதலில் லைட்டை கண்ட்ரோல் பண்ணக்கூடிய ஒன்றாகும், அதன் பிறகு மிக முக்கியமாக ஒரு பொருளின் அடர்த்தியை சரி செய்யகே கூடியவை, எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால் உங்ககளின் ஒரு விரலை உங்கள் கண் அருகில் வைத்துப் பாருங்கள், உங்கள் விரலின் ஒரு சிறிய பகுதி மட்டுமே நன்றாகத் தெரியும், அதே விரலைச் சற்று துளையில் வைத்துப்பார்த்தால் உங்கள் விரல் நன்றாகத் தெரியும். அதாவது இதில் முக்கியமாகப் போக்கஸ் (focus) என்று கூறுவர். விரலைக் கண் அருகில் வைத்துப் பார்த்தால் சிறிய பகுதி மட்டுமே தெரிந்தது அல்லவா அது ஸ்மால் அப்பச்சர் (small aperture), அதுவே சற்று தூரத்தில் விரலை வைத்துப் பார்க்கும் பொது விரல் நன்றாகத் தெரிந்தது அல்லவா அது லர்ஜ் அப்பச்சேர் (large aperture). இந்த லார்ஜ் அப்பச்சர் நாம் பயன் படுத்தும் கேன்ஸ் ஐ அடிப்படையாக வைத்துச் செயல் படும்.
இவை கேமராவில் இருக்கும் லென்ஸை அடிப்படையாக இயல்படுகின்றன:
இவை ஒரு ஒரு லென்ஸை வைத்து மாறுபடும்
பூள் ஓப்பன் அப்பச்சர் (full open or large aperture) - 1.8 அல்லது 2.8 இந்த எண் அதிக வெளிச்சத்தை கொடுக்கும், focus கம்மியாகக் காட்டும்
ஸ்மால் அப்பச்சர் (small aperture) - 22 இந்த எண் வெளிச்சத்தை கட்டுப்படுத்தி புகைப்படத்தை இருட்டாக மாற்றி விடும், focus அடர்த்தியாகக் காட்டும்
ISO / ஐ எஸ் ஓ - என்றால் என்ன :
ஐ எஸ் ஓ (ISO) என்பது கேமராவை அடிப்படையாக வைத்துச் செயல் படும் லைட் கண்ட்ரோல் செய்வது. நாம் எவ்வளவுக்கு எவ்வளோவோ ஐ எஸ் ஓ (ISO) கம்மியாகப் பயன்படுத்திக்கிறமோ அதற்க்கு ஏறாற்போல் புகைப்படம் நன்றாக வரும். நாம் பயன் படுத்தும் ஐ எஸ் ஓ (ISO) 100 ல் இருந்து 1500 க்குள் இருந்தால் மிகவும் நல்லது, இது புகைப்படம் எடுக்க மட்டும், அதே வீடியோவாக இருந்தால் 100 ல் இருந்து 800 க்குள் இருப்பது நல்லது. மிகவும் முக்கியமானது ஐ எஸ் ஓ (ISO) அதிகாமாக வைத்துப் புகைப்படம் எடுத்தல் புகைப்படம் வீணாகப்போகும் (தரம் இருக்காது)
இவை அனைத்து கேமராவில் அதிகமாக மருமடுவது
ஐ எஸ் ஓ (ISO) - 100 ல் இருந்து 1500க்கும் வைக்கலாம் இந்த எண்ணிக்கை புகைப்படத்தின் தரத்தை உயர்த்தும், அதன் மேல் என்னைக் கூட்டினால், புகைப்படத்தில் கிரைன்ஸ் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
Shutter - ஷெட்டர்
ஷெட்டர் என்றால் கேமராவில் இருக்கும் முக்கியமான விஷயம். ஷெட்டர் நாம் எடுக்கும் புகைப்படத்தைக் கலங்காமல் இருப்பதற்காக உதவுவது. நீங்கள் பஸ்சில் பயணிக்கும் பொது உங்கள் போனில் போட்டோ எடுத்துப் பார்த்து இருப்பிர்கள். அந்தப் புகைப்படம் சற்று காலங்களாகத் தெரியும், அதுவே நீங்கள் ஒரு இடத்தில் நின்று அசையாமல் இருக்கும் பொருளைப் போட்டோ எடுத்த பார்த்து இருப்பிர்கள், நின்ற இடத்திலிருந்து எடுத்த போட்டோ நன்றாக வந்திருக்கும். அதே தான் கேமராவில் இருக்கும் ஷெட்டர். நாம் ஷெட்டர் ஐ கம்மியாக அதாவது 80 க்கு கீழ் வைக்கும் பொது நம் எடுக்கும் புகைப்படம் காலங்களாக இருக்கும் அதுவே நாம் ஷெட்டர் ஐ அதிகமாகக் கூட்டிக்கொண்டே போகப் போக வேகமா பறக்கும் பறவையைக் கூடத் தெளிவாக எடுக்கலாம்.
மிக முக்கியாகா இணை மென்றும் லைட்டை கண்ட்ரோல் செய்து புகைப்படம் எடுக்க உதவுகின்றன
இவை கேமராவில் முக்கியமான ஒன்று
ஷெட்டர் (Shutter) - 100 க்கு மேல் ஷெட்டர் ஐ கூட்ட படம் துல்லியமாக வரும், இது 100 ல் இருந்து 3000 க்கும் மேல் வைக்கலாம், ஒரு பொருள் வேகமாக அசையுதா இல்லை ஒரு இடத்தில் இருக்கிறதா என்ற கோணத்தில் ஷெட்டர் ஐ மாற்றி வைத்துப் புகைப்படம் எடுக்கலாம்.
Aperture - அப்பச்சர், ISO - ஐ எஸ் ஓ, Shutter - ஷெட்டர்
இவை மூன்றையும் பயன் படுத்தி ஒரு போட்டோவைச் சரியாக எடுக்கலாம், அதாவது ஒரு பொருளின் அசைவுத் தன்மை, அந்தப் பொருளுக்கு எவ்வளவு வெளிச்சம் தேவை, அந்தப் பொருள் எவ்வளவு அடர்த்தியாகத் தெரிய வேண்டும் என்பதை சரிபார்த்து இவைகளை பயன்படுத்தி சரியாகப் போட்டோ எடுக்கலாம்.
லைட் / Light
லைட் மிகவும் முக்கியம், நம் கண்கள் இயல்பாகப் பார்ப்பதை கேமரா பார்க்காது, நமக்கு இருட்டிலும் சிறிய வெளிச்சத்துடன் பார்வை சக்தி அதிகம், ஆனால் கேமராவுக்கு அவ்வளவு திறன் கிடையாது. அதனால் நாம் எடுக்கும் புகைப்படம் பகலில் இருந்தால் நல்லது அதுவே இரவிலோ அல்லது இருட்டான இடத்தில் இருந்தால் அதற்க்கு தனியாக லைட் அவசியமாகத் தேவை
இவை அனைத்தும் மிக மிக முக்கியமாக இருக்கும் அம்சங்கள். இவையே ஒரு போட்டோ எடுப்பதற்கு தேவையானது. இவைகளை தாண்டி இன்னும் இருக்கிறது அவைகளை வரப்போகும் பதிவில் பார்ப்போம்