Translate

What is the easiest drivers license to get / டிரைவிங் லைசன்ஸ் எளிதில் வாங்கலாம்

What is the easiest drivers license to get / டிரைவிங் லைசன்ஸ் எளிதில் வாங்கலாம்  

Easy to get Driving licence_toughtamizhan_11zon


தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் பெற ஓட்டுநர் பயிற்சி மையத்திற்கோ அல்லது ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கோ  செல்ல வேண்டும். அங்கு, குறிப்பிட்ட நாட்கள் ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு, ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்கின்றனர். 

18 வயது கடந்த பின்னர் முதன் முதல் எல்.எல்.ஆர் பதிவு செய்வது அவசியம், எல்.எல்.ஆர் ஐ வைத்துக்கொண்டு வாகனப் பயிற்சி முடிந்ததும், ஆர்டிஓ அதிகாரி முன் வாகனம் ஓட்டியபின் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும். இதற்கு நிறைய நேரம் எடுக்கும். 

இந்தச் செயல்முறையை ஆதரிக்கப் புதிய முயற்சிகள் rto மூலம் தொடங்கப்படுகின்றன. இதற்கு இன்னொரு நோக்கமும் உண்டு. சாலைப் போக்குவரத்து மற்றும் மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் இந்த நிகழ்விற்கான ஒரு பெரிய திட்டத்தைத் தயாரித்துள்ளது. இந்நிலையில் ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்குப் புதிய விதிமுறைகள் வரவுள்ளன. 

திட்டம் தொடங்கிய பிறகு, அனைத்து ஓட்டுநர் பயிற்சி மையங்களும் இந்தத் தரநிலைகளைக் கடைபிடிக்க வேண்டும். ஓட்டுநர் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி முடித்தபிறகு, ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும்போது ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறத் தேவையில்லை என்பது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. 

பெரும்பாலானோர் ஓட்டுநர் பயிற்சி மையத்திற்குச் சென்று எந்தவிதப் பயிற்சியும் இல்லாமல் பணம் மட்டும் செலுத்தி ஓட்டுநர் உரிமத்தைப் பெறுகின்றனர். அவர்கள் ஓட்டுநர்களாக மாறும்போது பல போக்குவரத்து விபத்துகளும் நடக்கின்றன. எனவே இந்தத் திட்டம் ஓட்டுநர் பயிற்சியை நிறைவு செய்யும் நோக்கத்துடன் வருகிறது. 

டிரைவிங் ஸ்கூலில் பயிற்சி கட்டாயம் என்பதால் ஓட்டும் திறன் மேம்படும். இந்தப் பட்டியல் போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஜனவரி 29ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

சாலை விபத்துகளை 50% குறைக்கும் வகையில் 2025ஆம் ஆண்டுக்குள் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகச் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url