Translate

தலைமுடி நன்கு வளர - சர்க்கரை நோய் குணமாக - கல்லடைப்பு நீங்க - உடல் சதை பிடிக்க


black hair maintain in tamil toughtamizhan_11zon


தலைமுடி நன்கு வளர - கருப்பாக வளர - Hair Growth

முடி நன்கு அடர்த்தி மற்றும் நீண்டு வளர்வதற்கு  : சடா மஞ்சளை நல்லெண்ணெயில் கலந்து நன்றாகக் காய்ச்சி வாரத்துக்கு  இரண்டு முறை தலைக்குத் தடவி ஊறவைத்து குளித்து வர வேண்டும்.

முடி கொட்டுவதை  நிற்பதற்கு : நில ஆவாரை ககியாழத்தை அரைத்துத் தலைமுடியில் தேய்து சிறுது நேரம் உறவைக்கலாம்.

முடி அதிகமாக  வளர : கேரட் எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி சற்று இளஞ்சசுட்டில்  தேய்த்து வந்தால் முடி நன்றாக வளரக்கூடும்.

செம்பட்டையாய் இருக்கும்  முடி கருப்பாக நிறம் மாற : மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சமமாக எடுத்துகொண்டு  மைய  அரைத்துத் தலைக்குத் தடவி வந்தால் சில நாட்களில் செம்பட்டையாக இருக்கும் முடி கருப்பாக நிறம் மாறும்.

செம்பட்டை முடி கருக்க நிறம் மாற  : நில ஆவாரை இலையுடன் மருதோன்றி இலை சேர்த்து அரைத்துப் பயன்படுத்தினால் கொஞ்ச நாட்களிலையே நன்கு  பலன் கிடைக்கும்.

தலை முடி நன்றாக வளர : செம்பருத்தி பூவை நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி தடவி வந்தால் முடி நன்கு வளகைக்கூடும்.

தலைமுடி அதிகம் உதிர்வதை தடுக்க : கோபுரம் தாங்கி இலை சாறை எடுத்து  நல்லெண்ணெயில் காய்ச்சி, சிறிது நேரம் தலையில் தடவி ஊறவைத்து  தலை குளித்தால் தலை முடி உதிராது.

இளநரையை  கருப்பாக மாற்ற : நெல்லிக்காய் அவ்வப்போது சாப்பிடும்  உணவில் சேர்த்து வந்தால் இளநரை ஒரு மாதத்தில் கருமை நிறத்திற்கு மாறும். நெல்லிக்காய்யை அப்படியே சாப்பிடலாம் மற்றும்  வற்றல் ஊறுகாய்யை போட்டுச் சாப்பிடலாம்.

முடி கருமையாகவும் மற்றும் முடி உதிர்வது நிற்க : நெல்லிக்காயை காயவைத்து அதனை நன்கு  பவுடராக்கி தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து  கொதிக்க வைத்து அதனை வடிகட்டித் தேய்த்து வர வேண்டும்.

முடி உதிர்வதை தடுக்க : வெந்தயம் குன்றிமணி நன்கு பொடி செய்து தேங்காய் எண்ணெய்யில் அதனை ஊறவைத்து இரண்டு வாரத்திற்கு பின் தினமும் தலைக்குத் தேய்த்து வந்தால் முடி உதிருவதை தடுக்கும்.

முடி உதிர்வதை தடுக்க : நில ஆவாரை கஷாயமாக மாற்றித் தலைமுடிக்கு  தடவி வந்தால் முடி உதிர்வது கொஞ்ச நாட்களிலையே நிற்கும்.

சர்க்கரை நோய் எளிதில் குணமாக 

உடலில் சர்க்கரை கட்டுப்பட : உணவுடன் சேர்த்து பாகற்காய் சாப்பிட்டு வர வேண்டும் அதேபோல்  சிறுகுறிஞ்சான் இலைப் பொடியாக்கி சாப்பிட்டாலும் சக்கரை நோய் உடலில் கட்டுப்படும்.

சர்க்கரை நோய் உடையவர்கள்  : இவ்வித நோய் தாக்கம் இருக்க கூடியவர்கள் மஞ்சளையும் அதனுடன் சேர்த்து அம்லா பவுடரும் தினமும் பாலில் கலந்து பருகிவர அவர்களின் நோய் தாக்கத்திற்கு மிகுந்த பலன் கிடைக்கும்.

சர்க்கரை நோயின் ஜீரண மண்டல பிரச்சினை : ஜீரண மண்டல பிரச்சினைக்கு மஞ்சள் நிறஒளி தீர்வைக் கொடுக்கும்.

சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு : அவர்களின் அணியும் செருப்பு கால்கள் இறுக்கமாகச் அணிக்  கூடாது.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு : உணவுடன் சேர்த்து அவரைப் பிஞ்சு, நாவல்பழம், பாவக்காய்  ஆகியவைகளை அடிக் கடி சாப்பிட்டு வருவது  நல்லது

சர்க்கரை வியாதியைச் சீக்கிரம் குணமாக : தினமும் 5 ஆவாரம்பூ வெறுமென நன்றாக மென்று  சாப்பிட்டு வர வேண்டும்.

சர்க்கரை நோய்யை கட்டுக்குள் வைக்க  : ஒரு கோவைப்பழத்தை  தினமும் வெறும் வயற்றில்  சாப்பிட்டு வரவும்.

சர்க்கரை வியாதிக்குத் தீர்வுக்கான : சிறு குறிஞ்சா இலை மற்றும்  தென்னம்பூ நன்றாக அரைத்துக் நன்கு காய வைத்துப் பொடி செய்து அவ்வப்போது சாப்பிட்டு வரவும்.

சர்க்கரை வியாதி தீர : தினமும்  கொன்றைப்பூவை நன்றாக  அரைத்துத் தினமும் மோரில் சாப்பிட்டு வர வேண்டும்.

சர்க்கரை நோயால்  ஏற்படும் எரிச்சலைக் குணமாக்க : அரைத்த மாவிலங்க இலையை உள்ளங்கால் மற்றும் கைகளில் பற்றுப் போட்டு ஒரு மணி நேரம் இருக்க வேண்டும்.

சர்க்கரை நோய் தீறுவதற்கு  : அத்திப பாலுடன் வெண்ணையை  கலந்து சாப்பிட வர வேண்டும்.

சர்க்கரை வியாதி குணமாக : ஆவாரம் பூவை அவ்வப்போது பச்சையாகச் சாப்பிட்டு வரலாம்.

சர்க்கரை நோய் கட்டுக்கோப்பாக இருக்க  : பாகற்காய் அல்லது சிறுகுறிஞ்சான் இலை இரண்டையும்  பொடி செய்து சாப்பிட்டு வரலாம்.

நீரழிவு பாதிப்புகள் தடுக்க : சிறியா நங்கை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வரலாம்.

சிறு நீர் சர்க்கரை : பாகல் இலைச்சாரை  50 மில்லி மட்டும் எடுத்துக்கொண்டு  வாரம் ஒரு நாள் மட்டும் சாப்பிட்டு வரக் எளிதில் குறையும்.

சர்க்கரை வியாதியைக் குணமாக : கொன்றைப்பூவை நன்றாக  அரைத்து மோரில் கலந்து சாப்பிட சீக்கிரமே சர்க்கரை வியாதி குணமாகும்.

நீரழிவு நோய் தீரவுக்கான : நன்னாரியின்  வேரைத் தண்ணீரில்  ஊற வைத்து வடிகட்டிக் அதைக் குடித்து வர நீரிழிவு நோய் தீரும்.

நீரழிவு நோய் குணமாக்க : ஆலம் பட்டை மற்றும் கொன்றை மரப்பட்டையை  அரைத்துக் தண்ணீரில் கலந்து குடிக்க நீரழிவு நோய் குணமாகும்.

சர்க்கரை நோய் சரியாக்க : வேப்ப இல்லை, ஓமம் மற்றும் சுக்கு சமமனா  அளவை எடுத்துப் பொடி செய்து பாலுடன் குடித்து வரச் சர்க்கரை நோய் சரியாகும்.

சர்க்கரை நோய் எளிதில் குணமாக : அருகம்புல், வேப்பிலை, வெற்றிலை,  மிளகு, நாவல்கொட்டை, கீழாநெல்லி இவையனைத்தையும் கஷாயம் செய்து  90 நாட்கள் குடித்து வரச் சர்க்கரை நோய் எளிதில் குணமாகும்.

உப்புச் சக்தி சீராக இருக்க : வேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி,  துளசி பொடி, கீழாநெல்லி பொடி எடுத்து, அவைகளை கலந்து ஒரு ஸ்பூன் காலையும்  மாலையும்  சாப்பிட்டு வரவும்.

கல்லடைப்பு நீங்க 

சதையடைப்பு தீர: நெருஞ்சில் விதையைப் பாலில் கொதிக்கவைத்து அதன்பிறகு  உலர்த்தி பொடி செய்து இளநீரில் சாப்பிட்டு வர வேண்டும்.

சிறுநீரக கற்கள் கரைக்க : கன்பிள்ளை சமூலம் 50 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரில் காய்ச்சி வடி கட்டி அவ்வப்போது 100 மில்லி லிட்டர் பருகி வரப் பலன் கிடைக்கும்.

கல்லடைப்பு நீக்க : மாவிலங்கப் பட்டை கஷாயம் செய்து தினமும் காலை மாலை சாப்பிடவும்.

கல்லடைப்பு நீங்க : நெருஞ்சில் விதையைப் பாளுடன் கொதிக்கவைத்து  உலர்த்தி அதனைப் பொடி செய்து மோரில் கலந்து குடிக்கலாம்.

சதை அடைப்பு நீக்க : முதிர்ந்த மருதாணி வேர் பட்டை கஷாயம் செய்து அதனைச் சாப்பிட்டு வரவும்.

கல் அடைப்பு நீங்க : மருதாணி வேர் பட்டை சிதைத்து தண்ணீரில் காய்ச்சி பருகி வர வேண்டும்.

சிறு நீரக கற்கள் கரைய : சிறுபூளை சமூலத்தை  ஒரு லிட்டர் நீர்விட்டு காய்ச்சி கால் லிட்டர் ஆனவுடன் அதனைத் தினமும் காலை மாலை சாப்பிட்டு வரக் கற்கள் சீக்கிரமே  கரையும்.

கல்லடைப்பு நீங்க : பீணா இலையைக்  தண்ணீருடன் சேர்த்து கசாயமாக்கி தினமும் காலை மாலை குடித்து வரக் எளிதில் குணமாகும்.

சிறு நீரக கற்கள் கரைய : வாழைத் தண்டை சமைத்து உணவுடன் உண்ணலாம்.

சிறு நீரக கற்கள் கரைய :  வாழை மரத்தில் குச்சி சொருகி வைத்து அதில் இருந்து  வடியும் சாறை அவ்வப்போது குடித்து  வரலாம்.

கல்லடைப்பு நீங்க :  நத்தைசூரி விதையை வறுத்துப் பொடியாக்கி தண்ணீருடன் சேர்த்து கஷாயம் செய்து அதனுடன்  கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வரக் கல் அடைப்பு தீரும்.

சதையடைப்பு நீங்க : முதிர்ந்த மருதாணி வேர் பட்டை கஷாயம் செய்து சாப்பிட்டு வரச் சதை அடைப்பு நீங்கும்.

உடல் சதை பிடிக்க 

உடலின் எடையை அதிகரிக்க :  தினமும் உணவு உட்க்கொண்ட பின் இரவில் பால் குடிக்கும் முன் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர ஓர் ஈரு மாதத்தில் எடை கூடும்.

உடல் பருமனாக : உணவுடன் சேர்த்து பூசணிக்காய் சமைத்து அதனைத் தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டு வந்தால் உடல் பருமனாகும்

மெலிந்த உடல் பெருக்கம் செய்ய : நேந்திரம் வாழைப்பழம், கடலை,  பசும்பால் தினமும் சாப்பிட்டு வரப் உடனே பலேன்  கிடைக்கும்.

உடல் மெலிவு சரியாக : சீந்தில் கொடி பொடி செய்து அதனைப் பாலுடன் கலந்து சாப்பிட்டு வர உடல் மெலிவு சரியாகி உடல் பருமன் கூடும் 

உடல் பூரிக்க : நிலவாகை சமூலம் நிழலில் வைத்து உலர்த்தி அதனைப் பொடி செய்து 2 கிராம் அளவு பசும் நெய்யில் கலந்து சாப்பிட்டு வரலாம்.

உடல்  இளைத்தவர்களுக்கு : பேரீச்சம் பழத்தைச் சாப்பிட்டு வர உடல் இளைத்து மெல்லியதாக இருப்பவர்களுக்கு இரும்புச்சத்து கிடைக்கும்.

ஒல்லியாக இருப்பவர்களுக்கு : காலையில் முருங்கை வேர் பொடி சாப்பிட மற்றும் இரவில் கேழ்வரகு கஞ்சி சாப்பிட கால்சியம் அதிகமாகக் கிடைக்கும் 


Next Post Previous Post
No Comment