Translate

கூகுள் CEO சுந்தர் பிச்சை

 கூகுள் CEO சுந்தர் பிச்சை - Sundarpitchai biography

sundharpitchai in tamil toughtamizhan_11zon


எங்குப் பிறக்கிறோம் எப்படி வாழ்கிறோம் என்பது நமது வெற்றியை நிர்ணியிக்காது. நமது கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் தான் நம்மை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும் - இதை மெய்ப்பட நிஜவாழ்க்கையில் காட்டிய தற்போதைய கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை பற்றித் தெரிந்து கொள்வோம். 

இந்தியாவின் தென் தமிழகத்தில் உள்ள மதுரை என்னும் மாநகரத்தில் ஜூலை மாதம் இரண்டாம் தேதி 1972 இல் பிறந்தவர் தான் பிச்சை சுந்தரராஜன்.தந்தை ரகுநாத பிச்சை மற்றும் தாயார் லட்சுமியுடன் சென்னையில் வளர்ந்துள்ளார்.

தன் பள்ளிப் பருவத்தில் தொலைக்காட்சி, கார் போன்றவற்றின் வாசம் தெரியாத அவர்க்கு தொலைபேசி வழியாக அவருக்கு வீட்டிலிருந்த படியே  தொலைபேசி மட்டும்தான் பொழுதுபோக்கு. அவ்வாறு வந்ததே தொலைபேசி எண்களை மனப்பாடம் செய்யும் பழக்கம். 

இளம் வயதிலேயே கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் உடையவர் சுந்தர் பிச்சை. புத்தகம் படிக்கும் ஆர்வம் கொண்ட இவர் விடுமுறை நாட்களில் கூடப் புத்தகத்தை மட்டுமே நாடியதால்  நட்பு வட்டாரம் இல்லாமல் போனது இவர்க்கு.

மின் பொறியாளராக இவர் தந்தை தினமும் தன் வேலையில் சந்திக்கும் சவால்களை வீட்டில் இவருடன் பகிர்ந்து கொள்வார்.இதனால் சுந்தர் பிச்சைக்கு அறியாமலேயே தொழில்நுட்பத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அவர் தன் கல்லூரிப் படிப்பை ஐஐடி காரக்பூரில்  தொடர்ந்துள்ளார் metallurgical engineering பிரிவைத் தேர்ந்தெடுத்து படிக்கும்போதே மின்னணு தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்று 1993இல் வெள்ளிப் பதக்கம் பெற்று பொறியியல் படிப்பை முடித்தார். அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்ட் யூனிவர்சிட்டியில் முதுகலைப் பட்டம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் அதைத் தவற விடாமல் ஏற்றுக்கொண்டார் சுந்தர் பிச்சை.

மேலும் அவர் எம்பிஏ படிப்பு படிக்க  ஸ்கூல் ஆஃப் பிசினஸ் யூனிவர்சிட்டி பென்சில்வேனியாவில் படித்துப் பட்டம் பெற்றுள்ளார். பிஎச்டி படிப்பைத் தொடர ஸ்டான்ஃபோர்ட் யூனிவர்சிட்டியில் வாய்ப்பு கிடைத்தும் சுந்தர் பிச்சை அதைத் தவிர்த்து விட்டாராம், காரணம் ஐஐடியில் காதலித்த அஞ்சலியைத் திருமணம் செய்ய அவருக்கு ஒரு நிரந்தர வேலை தேவை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு மெக்கன்சியன் கம்பெனியில் வேலை ஒன்று சேர்ந்து அஞ்சலியைத் திருமணம் செய்துள்ளார் சுந்தர் பிச்சை. தற்பொழுது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

2004ம் ஆண்டு கூகுள் தயாரிப்பு மேலாளராகச் சேர்ந்துள்ளார் சுந்தர் பிச்சை. கூகுள் டூல்பார் தயாரிக்கும் பணியில் சிறிய குழுவினர் கொண்டு வேலை செய்தார். அப்போது இருந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர்  mozilla firefox browser தகர்த்து எரிந்து கூகுளே நிலைநாட்ட 2008ஆம் ஆண்டில் கூகுள் க்ரோம் மற்றும் கூகுள் ஓஎஸ் போன்ற தயாரிப்புகளில் பிரபலமானார் சுந்தர் பிச்சை. இதனால் 2008ல் Vice President Of Product Development என்ற பதவி உயர்வு பெற்று அதன் பின் உருவான ஜிமெயில், கூகுள் டாக்ஸ் போன்றவற்றுக்கும் தலைமை வகித்தார்.

2012 ஆம் ஆண்டில் சீனியர் vice-president Of  google apps  என்ற பதவி கிடைத்துள்ளது. இதோடு நிற்காமல் மேலும் 2013இல் android பொறுப்பும் வந்து சேர அக்டோபர்  2014 product chief ஆக உயர்வு பெற்றுள்ளார். 

சுந்தர் பிச்சையின் கடின உழைப்பும் ஆர்வமும் கூகுளின் CEO Larry Page என்ற  புது நிறுவனம் உருவாக்கத் தோன்றியுள்ளது. ஆல்பபெட் என்ற கூகிளின் கிளை நிறுவனம் ஒன்றை உருவாக்கி அந்த நிறுவனத்தின் சிஇஓவாகச் சுந்தர் பிச்சை 10 ஆகஸ்ட் 2015-இல் நியமிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டில் கூகுள் கிளை நிறுவனம் ஆல்பபெட் இல் சுந்தர் பிச்சைக்கு 2 லட்சத்து 73 ஆயிரத்து 328 பங்குகள் தரப்பட்டது.இதன் மதிப்பு சுமார் 199 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதன் தற்போதைய மதிப்பு 650 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் சுந்தர் பிச்சையின் சம்பளம் ஒரு ஆண்டு கணக்கின்படி 6 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ஆக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓ போட்டியாளர்களில் சுந்தர் பிச்சையும் ஒருவராக 2014 ஆம் ஆண்டுப் பங்கு கொண்டுள்ளார். ஆனால் அப்போது சத்யா நாதெல்லா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் twitter  நிறுவனம் சுந்தர் பிச்சையை தன் நிறுவனத்தின் உயர் பதவியைக் கொடுத்துத் தன் வசமாக்க வேண்டும் என முயற்சித்ததாகவும் ஆனால் அதிக சம்பளம் கொடுத்து google அவரைத் தக்க வைத்துக் கொண்டதாகவும் ஒரு வதந்தி உலா வந்தது.

இன்றும் சுந்தர் பிச்சை தான் படித்த ஐஐடி கல்லுரில் பயிலும் மாணவர்களுடன் ஸ்கைப் மூலம் பேசி ஆலோசனைகளைக் கூறி தொழில்நுட்பத்தில் ஆர்வத்தை ஏற்படுத்திகிறார். சுந்தர் பிச்சையின் தந்தை சிறுவயதில் பகிர்ந்து கொண்ட சவால்கள் அவர்க்கு ஆர்வத்தை தூண்டியதோடு அதனை நோய்க்கி பயணிக்கும் பாதையையும் கொடுத்து உள்ளது. 

நடுத்தர குடும்பத்தில் பிறந்த சுந்தர் பிச்சைக்கு அமெரிக்கா என்பது வெறும் கனவாக மட்டுமே இருந்திருக்கும். அவரது ஆர்வம் மற்றும் விடா முயற்சிதான் இன்று புகழின் உச்சிக்கு அவரைகொண்டு சேர்த்து இருக்குறது.இது சுந்தர் பிச்சைக்கு மட்டுமல்ல ஒரு இந்தியனாக இந்தியர்களுக்கும் பெருமை சேர்க்கிறது.

Next Post Previous Post
No Comment