car wash business in Tamil - கார் வாஷ் தொழில்
car wash business in Tamil - கார் வாஷ் தொழில்
அனைவருமே பணம் சம்பாதிக்க வேண்டும் என்று என என வகையிலோ யோசித்துக்கொண்டு இருக்கிறார்கள் அனால் அது பல பேருக்கு வெறும் யோசனையாகவே இருக்கிறது. ஆம் இது உண்மை தான்
இங்கே நிறைய பேர் கையில் இருக்கும் பண மதிப்பைவிட அவர்கள் தொடங்கக போகும் தொழில் மிகவும் பெரியதாகவே இருக்கும் இதனாலயே அவர்களுக்குத் தொழிலைத் தொடங்க இரு அச்சம் இருக்கும்.
நம் தொழில் தொடங்கும் முன்பு நம் பணத்தை முதலில் மதிப்பிடாமல், நம் சிந்தனையை மதிப்பிட வேண்டும், முதலில் கையில் இருக்கும் பணத்தை எடுத்து ஓரம் வைத்துவிடுங்கள், அடுத்தபடியாக நீங்கள் என்ன தொழில் செய்யப்போகிறீர்கள் என்று ஒரு மனதாக முடிவு எடுங்கள், அதன் பிறகு அந்தத் தொழில் செயப்பரைகளை (ஒருவரை மட்டும் அல்லாமல் சில நபர்களை) சந்தித்து உங்களுக்கான சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துக்கொள்ளுங்கள்.
இவைகள் மட்டும் பத்தாது நீங்கள் ஆரம்பிக்கும் தொழில் மக்களிடம் எவ்வாறு வரவேற்பு இருக்கிறது என்றும் தெரிந்துக்கொள்ள வேண்டும். முடிந்த வரை பார்ட்னெர்ஷிப் தவிருங்கள், உங்களுக்கு மிகவும் நம்பிக்கையான நபர் இருந்தால் மட்டுமே அவர்களுடன் பார்ட்னெர்ஷிப் செய்து தொழிலைத் தொடங்குகள், என்றால் கணிப்பில் பார்ட்னெர்ஷிப் ஆரம்பித்த ஏகப்பட்ட தொழில் சரியாக அமைந்தது இல்லை.
சரி நாம் இப்போது பார்க்கப் போவது மிகவும் குறைந்த பணத்தில் செய்யும் ஒரு தொழில் தான், ஆனால் இப்போதே சொல்கிறேன் இந்தத் தொழிலுக்கு மிகவும் முக்கியம் மக்கள் நிறைந்த நகரமாகும். அதாவது தொழிக்கு ஏற்ற இடம்.
கார் வாஷ் - Car wash
ஆம் கார் வாஷ் இந்தத் தொழில் மிகவும் எளிமையானது, எளிமையானது என்றவுடன் நீங்கள் நினைப்பீர்கள் அனைத்து வேலையும் கடினம் தான் என்று. நன் சொன்ன எளிமை இனிஷியல் காஸ்ட் அதாவது முதலீட்டு பணம் மட்டுமே போட்டுச் செய்யக்கூடிய தொழில் அதன் பிறகு maintanance cost அதும் மிக மிகக் குறைவு.
இந்தத் தொழிலுக்குத் தேவை மிக மிக முக்கியமானது இடம் மட்டுமே, இந்தத் தொழில், இடத்தை வைத்துத் தான் நன்றாகச் செயல்படும். இந்தத் தொழிலில் நல்ல லாபமும் பார்க்கலாம்
கார் வாஷ் தொழிலைத் தொடங்க முதலில் சாதாரணமா வாட்டர் வாஷ் மட்டுமே போதுமானது. நிறைய மக்கள் வெறும் வாட்டர் வாஷ் மட்டுமே பண்ண கூடியவர்களாக இருக்கிறார்கள். கார் வாஷில் மேல்புறம் மட்டுமே வாஷ் செய்ய 250 ரூபாயிலிருந்து 350 ரூபாய்க்கும், காரின் உள் புறம் வாஷ் செய்ய அதே 250 ரூபாயிலிருந்து 350 ரூபாய் வரைக்கும் வசூல் செய்யப் படுகிறது.
இது வெறும் சாதாரமாகக் சோப் வாஷர் மற்றும் தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி காரை வாஷ் செய்வதாகும்.
இதற்கு மேற்படியும் பல தரப்படடட கார் வாஷ் முறைகள் இருக்கின்றன.
சாதாரணமாக வாட்டர் வாஷ் செய்ய நமக்குத் தேவையானவை
1. வசதிக்கேற்ப இடம்
2. நீர் மோட்டார்
3. நீரை சேமித்துவைக்க டேங்க்
4. காம்ப்ரஸர்
5. தண்ணீரை பீய்ச்சி அடிக்கக் வாட்டர் ஸ்ப்ரே கன்
6. தேவையான துணிகள்
7. சோப் ஆயில்
இவை அனைத்தும் மட்டுமே இருந்தால் சாதாரண கார் வாஷ் க்கு போதுமானது.
இந்தப் பேசிக் கார் வாஷ் தொழிலைத் தொடங்க நமக்கான செலவு மிகவும் குறைவு
இதைத் தாண்டி இன்னும் கார் வாஷ் தொழிலை மேம்படுத்த, அடுத்த கட்ட நடவடிக்கை கூடுதல் காசு இருந்தால் இவை அனைத்தையுமே சேர்த்து செய்யலாம், அவை கிழே கொடுக்கப்பட்டுள்ளது
Car Wash—RO Water
Wash—Wax & Tyre—Dressing
Door Pads Cleaning & Polishing
Dash Board Cleaning & Polishing
Vacuum Cleaning
Plastic Body Polishing
Interior Dressing
இவைகள் தனி தனியே செய்யக் கார் வாஷ் தொழில் இன்னும் மெருகு ஏறும்.
அனால் நாம் எளிதாக ஆரமிக்கும் கார் வாஷ் தொழிலுக்கு இவைகளே போதுமானது. நீங்கள் அரமிப்பிக்கும் கார் தொழில் மேலும் மேலும் நன்றாகச் செயல்பட தொடங்கினாள். கூடுதலாக இருக்கும் கார் வாஷ் முறையும் சேர்த்துக்கொள்ளலாம்.
இதற்கு மெயின்டனன்ஸ் மற்றும் சர்வீஸ் க்கு ஆகும் செலவு மிகவும் குறைவு.