How to prepare for exam easily - தேர்வுக்கு எளிதில் படிப்பது எப்படி ?
தேர்வுக்குத் தயாராகும் நபர்களுக்கு ஒரு விதமான தயக்கமும் குழப்பமும் ஏற்படும். இவ்விதமான தயக்கமும் குழப்பமும் நன்கு படித்தவர்கள், படிக்காதவர்கள் அனைவருக்குமே வரக்கூடியவை. ஆம் நன்கு படித்தவர்கள், நாம் தான் அனைத்தையுமே படித்துவிட்டோமே என்ற ஒரு துணிச்சல் இருந்தாலும் ஆனால் தேர்வில் நாம் படிக்காதது வந்துவிடடால் என்ன ஆகுமோ என்ற அச்சம் வருகிறது. அதுவே நன்றாகப் படிக்காமல் இருக்கும் நபர்களுக்கு, தேர்வில் எது கேட்டாலும் நமக்கு ஒன்றும் தெரியாது கண்டிப்பாகத் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சம் இருந்துக்கொண்டே இருக்கும். எப்படி பார்த்தாலும் தேர்வு என்று வந்துவிட்டால் அனைவருக்குமே அச்சம் குழப்பம் வந்துவிடுகிறது.
முன்கூட்டியே தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு அட்டவணை அறிவித்தாலும் சில நபர்கள், படிப்பில் நாட்டம் இல்லாத நபர்கள் கடைசி நேரத்தில் தேர்வுக்காக அறையும் குறையுமாகப் படித்துவிட்டு தேர்வு எழுதச் செல்கின்றனர். இதற்காகத் தேர்வுக்குத் தயாராகும் நபர்கள் எளிதில் எவ்வாறு படிப்பது எப்படி குழப்பம் இல்லாமல் தேர்வு எழுதுவது என்று இதில் நம் பார்ப்போம்
நமக்குப் பிடித்த நேரம் :
ஆம், நமக்கான பிடித்த நேரம் மிகவும் அவசியம், நம் படிக்க விரும்பினால், அதற்க்கு என்று நமக்குப் பிடித்தமான நேரத்தைத் தேர்வு செய்ய வேண்டும். நாம் படித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துடன் கண்ட நேரங்களில் நாம் படிப்பது நமது நேரத்தை வீணாக்குவதற்கு சமம். இவ்வாறு கண்ட நேரங்களில் படிப்பது நமது மூளையும் நமது மனமும் ஒத்துழைக்காது. நமக்கான பிடித்த நேரத்தை ஒதுக்கிக் கொஞ்சம் கொஞ்சமாகப் படித்து வந்தால், தேர்வு நெருங்கும் பொது மாணவர்களுக்கு மிகவும் எளிதாகவும் இருக்கும்.
படிப்பதற்கு ஏற்ற இடம் :
நாம் படிப்பதற்கு அமைதியான ஒரு சூழல் இருப்பது அவசியம். நமக்குப் பிடித்த சூழல் அமைவதற்ற்கு மிகவும் கடினம், ஆனால் நாம் இருக்கும் இடத்தில் நாம் தான் நமக்குப் பிடித்த இடத்தைத் தேர்ந்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். நம் இருக்கும் வீட்டில் அவ்வாறு பிடித்தமான சூழல் அமையாவிடடாள். அருகில் இருக்கும் தொட்டிடத்துக்கோ அல்லது அமைதியான இயற்க்கை சுழலிலோ சென்று படிக்கலாம். அங்கு ஒரு விதமான அமைதி நம்மைச் சூழ்ந்துக்கொள்வதால் நாம் படிக்கும் பொது மிகவும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
தேர்தெடுத்து படிப்பது :
அனைவரும், அனைத்தையும் படிப்பது என்பது கடினமான விஷயமே. அதனால் படிப்பைத் தொடங்கும் முன் ஒரு அட்டவினை நமக்கு நாமே போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். நாம் உருவாக்கும் அட்டவினையை தயார் செய்வதற்கு முன் நமது ஆசிரியர் அல்லது பாடத்தைப் பற்றி நன்கு தெரிந்தவர்களிடம், பாடத்தில் எது மிகவும் முக்கியம் என்று கேட்டுத் தெரிந்திற்க்கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல் கடந்த ஆண்டுகளில் நாம் படிக்கப் போகும் பாடத்திட்டங்களில் எவ்வாறு தேர்வில் கேள்வி கேட்கப்பட்டுள்ள என்று அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகு நாம் அட்டவினையை உருவாக்குவது நல்லது.
பொழுதுபோக்காகப் பார்க்க வேண்டும் :
நாம் படிக்கும் பாடத்தை, கடினமாக ஏற்றுக்கொள்ளாமல், நாம் ஒரு புது விஷயத்தைத் தெரிந்துக்கொள்ள போகிறோம் என்ற எதிர்பார்ப்பை நமக்குளேயே தூண்ட வேண்டும். அனைவருக்கும் அந்த எதிர் பரப்பு வருவதில்லை. நாம் அனைவரும் பொழுதுபோக்குக்காகச் செய்யும் செயல்கள், எவ்வளவு பெரிய செயல்களாக இருந்தாலும் அதை நாம் பிடித்துச் செய்வதால், அதை எளிதில் செய்து முடித்து விடுகிறோம், அதே போல் தான் படிப்பும், படிப்பு என்பது மிகவும் கடினமான ஒன்று கிடையாது, பெற்றோர்கள் ஆசிரியர்கள் படிப்பை மாணவர்களுக்குப் பொழுதுபோக்காகச் சொல்லிக்குடுக்கும் பொது அது மாணவர்களில் மனதில் எளிதாகப் பதிந்து விடுகிறது. மாணவர்களும் திருமா அதைப் படிகிக்கும் பொது மிக எளிதாகி விடுகிறது.
எளிதில் புரிந்துக்கொள்ளலாம் :
முதலில் நீங்கள் படித்த பாடத்தை, பிறரிடம் விளையாடுவது போல் ஒரு கதையாகச் சொல்லிப்பாருங்கள், நீங்கள் படித்த பாடத்தை ஒரு கதையாக மற்றவர்களுக்குச் சொல்லும்போது உங்களுக்குள் அது மிகவும் பதிந்து விடும், நாம் மறக்க நினைத்தாலும் அந்தப் பாடம் நம் மனதிலிருந்து மறக்காது
தேர்வு
பலர் தேர்வு நெருங்கும் முன் தான் படிக்க ஆரமிப்பார்கள், அது சிலறால் முடியாது, இருவருக்கும் வித்தியாசம் என்னவென்றால் ஒரு ஒருவரும் படிக்கும் முறைதான், சிலர் புரிந்து படிப்பார்கள், சிலர் மனப்பாடம் செய்வார்கள், சிலர் சுய சிந்தனையை வைத்துப் படிப்பார்கள். எல்லாத்தையும் விடச் சிறந்தது புரிந்து படிப்பது மட்டுமே. தேர்வுக்குச் சென்றபின் முதலில் நமக்குத் தெரிந்தவற்றை எழுத வேண்டும் அவ்வாறு எழுதுவதன் மூலம் நமக்கு நேரம் கிடைக்கும், பிறகு தெரியாததை நாம் சுய சிந்தனையைப் பயன் படுத்தி கேள்விக்கு ஏற்றார் போல் எழுதினால் அதுவே போதுமானது. அதற்காக விடை தெரியவில்லை என்று எழுதாமல் வரக்குதுடாது.
படிப்பைக் கடுமையாக்க கற்று தரும் பெற்றோர்கள் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஒரு விளைட்டு தனத்தை காட்டி சொல்லிக்கொடுத்தால் மாணவர்கள் எளிதில் தெரிந்துக்கொள்வார்கள்